350 கோடியை தாண்டிய ஹ்ரித்திக் ரோஷனின் அதிரடி ஆக்சன் ப்ளாக் பஸ்டர் வார்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

By manikandan | Published: Oct 12, 2019 09:15 AM

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த சூப்பர் 30 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர பெற்றது. இப்படத்தை அடுத்து ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியான திரைப்படம் வார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என டப் செய்யப்பட்டு ரிலீசானது. ரிலீஸ் ஆன அத்தனை இடங்களிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 350 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc