எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் தேடப்பட்டவர்கள் கைது?

  • கடந்த 08-ம் தேதி இரவு 09. 40 மணி அளவில் சோதனைச்சாவடியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
  • வில்சன்  கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் ,தவ்பீக் ஆகிய  இருவரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  அதை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து  வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.

இந்நிலையில் இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 09. 40 மணி அளவில் சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்தபோது மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் அப்துல் சமீம் ,தவ்பீக்  இருவரும் ஈடுபட்டது.சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் அந்த இருவரையும் தேடிவந்த நிலையில் , காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் ,தவ்பீக் ஆகிய  இருவரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

author avatar
murugan