நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா ? அப்ப இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துங்க !

இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் தலைமுடி உதிர்வும்  ஒன்று.  இந்த பிரச்சனையால் ஆண்கள் ,பெண்கள் என இருபாலரும் பாதிக்கபடுகிறார்கள். இதற்காக நாம் பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றியும் போதிய தீர்வு கிடைப்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை  முடி உதிர்வை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் -2

ஆலிவ் எண்ணெய் (அ ) தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை துருவி எடுத்து கொள்ளவும்.  ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கேரட்டை சேர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கேரட் மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். பின்பு கேரட் நன்கு கரைந்து வரும் வரை கேரட்டை நன்கு  ஊறவைக்கவும். கேரட்  நன்கு கரைந்து எண்ணெய் ஆரஞ்சு நிறத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து  விடவும். இந்த எண்ணெயை 1  நாள் முழுவதும் அப்படியே வைத்து விடவும். கேரட் இந்த எண்ணெயில்  நன்கு ஊறிவிடும்.மறு நாள் வடிகட்டியை பயன்படுத்தி வடித்து  சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தலாம்.

குறிப்பு :

  • இந்த எண்ணெய்யை குளிர்ந்த இடத்தில் அல்லது பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
  • கேரட்டில் உள்ள வைட்டமின் ஈ சத்து மற்றும் பீட்டா கரோடின் போன்றவை தலை முடி உதிர்வை தடுத்து முடிக்கு சிறந்த கண்டிஷனாராக பயன்படுகிறது.
  • முடிக்கு பல ஊட்டசத்துக்களையும் கொடுக்கிறது. இந்த கேரட் எண்ணெய் முடியை எப்போதும் ஈரப்பதத்துடன்  வைக்க உதவுகிறது.
  • மேலும் இந்த கேரட் எண்ணெய்  பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளையும்  தடுக்க பயன்படுகிறது.