அழகு வேண்டுமா.? கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்.!

அழகு வேண்டுமா.? கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்.!

கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது.  சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள்.

கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட  கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை  பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் பார்க்கலாம்.

பொலிவிழந்த சருமத்தை போக்க:

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்த முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும்.  சருமம் சுருக்கமின்றி இளமையோடு இருக்கலாம்.

எண்ணெய் பசையை நீக்க :

ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் பூசவும் சில நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சருமம் மென்மையாக இருக்க:

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் அதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவவும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.

author avatar
murugan
Join our channel google news Youtube