சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு - முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று

By venu | Published: Dec 03, 2019 04:44 PM

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலை கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ,4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டு வருகிறார்.இவருடன் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc