சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை… மோடி பெருமிதம்…

சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை… மோடி பெருமிதம்…

சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் வேளாண்மை, மருத்துவம்,  சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித்  திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி  வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு  அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு முன்பே  உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத் என்றும்,  இது, கடந்த 2010ம் ஆண்டு பதானில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்  வினியோக அமைப்பு’ என்பதை உலகிற்கு காட்டுவோம் என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால், இன்று சூரிய மின்சக்தி உற்பத்தியிலும்,  பயன்பாட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இது, கடந்த 6 ஆண்டுகளில், உலகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில்  உள்ளது என்றார், மேலும், கிசான் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் மூலம் காலை 5 மணி முதல் இரவு 9.30 வரை மின்சாரம் கிடைப்பதால் லட்சக்கணக்கான விவசாயிகள்  பயன் அடைவார்கள் என்று அவர் பேசினார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube