பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம்..! கருத்தில் இருந்து பின்வாங்கிய அமைச்சர் பாஸ்கரன்

பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம்..! கருத்தில் இருந்து பின்வாங்கிய அமைச்சர் பாஸ்கரன்

  • பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 
  • தனது கருத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் பின்வாங்கியுள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக மக்களவை தேர்தலில் இருந்து கூட்டணி வைத்து வருகிறது. அதிமுக -பாஜக கூட்டணி இடையே பீதியை ஏற்படுத்தும்,வகையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விழா நடைபெற்றது.இந்த விழாவில் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் அமைச்சரவையிலே  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார். எனவே அமைச்சரின் இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரின் சொந்தக்கருத்து.அதிமுகவின் கருத்து இல்லை என்று கூறினார்.இந்நிலையில் தனது கருத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் பின்வாங்கியுள்ளார்.அதாவது தற்போது அவர் கூறுகையில், அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது என்று தனது கருத்தை மாற்றியுள்ளார்.

Latest Posts

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாளை பிரதமர் உரை..!
#IPL2020: பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத்.. 127 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!
#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!
ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்!
பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!
#IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது!
#IPL2020: டக் அவுட் ஆன ரஹானே.. 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி!
அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!
வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை..!