ஒருநாள் போட்டியில் 6 முறை மோசமான ரன் கொடுத்த வஹாப்...!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது  ஒருநாள் போட்டியில்

By murugan | Published: Oct 03, 2019 08:15 AM

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது  ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி  வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து  297 ரன்கள் எடுத்தனர்.இதில் அதிகபட்சமாக  இலங்கை அணியின் தொடக்க வீரரான குணதிலக 133 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார். இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர் வீசி 81 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே பறித்தார். இதில் வஹாப் ஒரு ஓவர் கூட மெய்டன் செய்யவில்லை. இதன் மூலம்  ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் 26 முறை 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளனர்.இந்த பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வஹாப் மட்டுமே  6 முறை ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை  - 46 முறை பாகிஸ்தான்  - 26 முறை * இங்கிலாந்து - 25 முறை
Step2: Place in ads Display sections

unicc