கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளார்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இது தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும், 20% ஊதிய உயர்வு பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.