குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இந்த ராஜாவை! க்ளீன் ‘யு’ சான்று பெற்ற சிம்பு திரைப்படம்!!!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. தெலுங்கில் இந்த படம் நல்ல வெற்றி பெற்றதால் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தினை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்று அளித்துள்ளனர்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment