தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முடங்கியது வோடபோன் சேவை!வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்பு

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திடீரென கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தனது சேவையை நிறுத்தியது.

ஆனால் ஏர்செல் நிறுவனம்  கடன் பிரச்சினையால் திடீரென்று மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினார்கள்.

இதன் பின்னர்  வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறினார்கள்.குறிப்பாக  ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல்,ஏர்டெல்,வோடோபோன் நிறுவனத்துக்கும் மாறினனார்கள்.

ஆனால் அந்த சமயத்தில் ஜியோவின் வருகை  மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக விளங்கி வருகிறது.ஆனால் சமீப காலமாக வோடபோன் நெட்ஒர்க் பிரச்சினை அதிகம் வந்த வண்ணமே இருக்கிறது.  Image result for vodafone tamilnadu

இந்நிலையில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  வோடபோன் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சேவை பாதிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அழைப்புகள் சரியாக செல்லவில்லை, குறுஞ்செய்திகள் செல்லவில்லை, இணைய சேவை வரவில்லை,அதுவும் 4g,3g இணைய சேவை இல்லை வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதேபோல் வோடபோன் கேர்க்கு இது தொடர்பாக கால் செய்தாலும் அதிகாரிகள் யாரும் பேசுவதில்லை என வோடபோனுக்கு பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் தற்போது வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment