இனி ‘VI’ ஆக மாறும் வோடபோன்-ஐடியா நிறுவனம்.!

வோடபோன்-ஐடியா தனது புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்தியது. இனி வோடபோன்-ஐடியா புதிய பிராண்ட்  ‘VI’ ஆக இருக்கும்.

வோடபோன் ஐடியா நிறுவனம் மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி, வோடபோன்-ஐடியா நிறுவனம்  புதிய பிராண்டான  ‘VI’  அறிமுகப்படுத்தியது. வோடபோனின் வி மற்றும் ஐடியாவின் ஐ ஆகியவற்றை இணைப்பதன் மூலம் நிறுவனம் ‘VI’ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 2018-இல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றை இணைத்து வோடபோன்-ஐடியா லிமிடெட்  என்ற புதிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், வோடபோன் மற்றும் ஐடியா இரண்டும் இரண்டு தனித்தனி பிராண்ட் அடையாளங்களை இன்றுவரை பராமரித்து வந்தன.

இது குறித்து வோடபோன் ஐடியா  தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், கடந்த காலத்தில் நிறுவனம் கட்டணத்தை அதிகரிக்க தயங்கவில்லை. மேலும், குறைந்தபட்ச விகிதத்தின் அதிகபட்ச வீதத்தை சரிசெய்ய  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.மேலும் ‘VI’ என்ற பெயர் வெளியில் தெரிந்தவுடன் நிறுவனத்தின் பங்குகள் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.