தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  வ.உ.சி. கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்…!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  வ.உ.சி. கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்…!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில்   வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் 49 நாட்களாக மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில்   வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி முன்பு அமர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *