மிகவும் பிசியாக அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் நடிக்க உள்ள சீயான் விக்ரம்!

சீயான் விக்ரம் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது

By Fahad | Published: Mar 28 2020 05:49 PM

சீயான் விக்ரம் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது தான் கமிட் ஆன படங்களுக்கு ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதுவரை தன் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான ஆதித்யா வர்மா ஷூட்டிங்கிற்கு தினமும் சென்று தன் மகன் நடிப்பை மெருகேற்றியுள்ளார். தற்போது ஆதித்யா வர்மா பட வேலைகள் முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த பட வேளைகளில் பிஸியாகிவிட்டார். அடுத்ததாக மலையாளம் தமிழில் பிரமாண்டமாக  உருவாக உள்ள மஹாவீர் கர்ணா படத்தில் கர்னணனாக நடிக்க உள்ளார். அடுத்து இமைக்க நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படங்களை அடுத்து மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகால சோழனாகவும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News From vikram 58