மீண்டும் நட்சத்திர வீரர் வருகை.! டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.!

  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு. நியூஸ்லாந்தின் நட்சித்திர பந்துவீச்சாளர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மீண்டும் நட்சத்திர வீரர் வருகை.! டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.!

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரண்ட் போல்ட் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலது கையில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என குறிப்பிடப்படுகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் அணி :

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டாம் லாதம், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், ஹென்ரி நிகோலஸ், வாட்லிங், கோலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, நீல் வாக்னர், டிரன்ட் போல்ட், அஜாஸ் படேல், கெயில் ஜேமிஸன், டேர்ல் மிட்ஷெல்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்