கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு

BJP's Visvesvara Hegde Kakery elected as the new Speaker of Karnataka

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது. பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா .பின் கர்நாடக  பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற  குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார். எனவே  நேற்று  பாஜக எம்எல்ஏ விஸ்வேஷ்வர் ஹெக்டே  சபாநாயகர் தேர்தலில் போட்டியிட   சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இன்று கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டார்.

BJP's Visvesvara Hegde Kakery has been elected as the new Speaker of Karnataka. Some MLAs resigned from their post saying they would withdraw their support to Kumaraswamy government in Karnataka politics. The Kumaraswamy government failed in a vote of confidence after this. Yeddyurappa was sworn in as the Chief Minister for the fourth time. At this point, Speaker Ramesh Kumar stepped down as the Yeddyurappa government won the confidence vote. So BJP MLA Visvesvar Hegde went to contest for the Speaker election yesterday.