அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினம் மாற்றம்.! இன்று மசோதா தாக்கல்.!

அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினம் மாற்றம்.! இன்று மசோதா தாக்கல்.!

  • ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு  மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது.
  • 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 151  இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் ஆந்திராவின் தலைநகராக அமராவதி மாற்றப்பட்டது. மேலும் அமராவதியை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு  சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால் கடந்த மே மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டி  ஆந்திரா முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அமராவதியை தலைநகராக மற்ற நடைபெற்ற பணிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல முறைகேடுகள் செய்து இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆந்திராவின் தலைநகரை ஜெகன்மோகன் ரெட்டி மாற்ற விரும்பி உள்ளார். இதை தொடர்ந்து அரசு நிர்வாகத்திற்கு விசாகப்பட்டினமும் , சட்டமன்றத்திற்கு அமராவதியும் , நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்து உள்ளார்.

தலைநகரை மாற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க 2 குழுக்களை ஜெகன்மோகன் ரெட்டி அமைத்தார். இந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்தனர். இந்த அறிக்கைகளை மந்திரிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் அறிக்கை அளித்துள்ளது.

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு  மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டு தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 151  இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube