விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி எது தெரியுமா..?

விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி பற்றி ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு சுவாரசியமான பதிவை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி பற்றி கூறியுள்ளார்.

” கடந்த 2014 ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்றது, அதில் குறிப்பாக முதல் முறையாக விராட் கோலி இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அந்த போட்டியில் காயம் காரணமாக தோனி வெளியே அமர்ந்ததால் கோலிக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தது, இதைத்தான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.