விராட் கோலி சம்பந்தப்பட்ட16 உருவங்களை உடம்பில் பச்சை குத்திய தீவிர வெறியன்.!

  • ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.

By Fahad | Published: Mar 28 2020 04:44 PM

  • ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.
  • பெஹேரா தனது உடலில்  கோலியின் ஜெர்சியின் எண் ,  விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும்,  பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் தொடர்புடைய 16 உருவங்களை உடலில் பச்சை குத்தி உள்ளார். அதில் கோலியின் ஜெர்சியின் எண் ,  விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும்,  பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார். இதுபற்றி பெஹேரா கூறும்போது, நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். விராட் அவர்களின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு மரியாதையை செலுத்தும்  விதமாக தான் உடலில் பச்சை குத்தி கொண்டேன் என கூறினார். கடந்த அக்டோபர் மாதம் விசாப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியின் பயிற்சி நேரத்தில் கோலியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தசந்திப்பின் போது கோலி என்னை அவர் கட்டிபிடித்தபோது  மகிழ்ச்சி அடைந்தேன் என கூறினார்.