ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களை தட்டி கேட்ட விராட் கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது  ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி அருகில் நின்றார்.அப்போது சில ரசிகர்கள் “சீட்டர் ஸ்மித்” என கோஷமிட்டு கிண்டல் செய்தனர்.

இதைப் பார்த்த விராட் கோலி ரசிகர்களை நோக்கி வேகமாக சென்று ஸ்மித்தை கிண்டல் செய்வதை விட்டு விட்டு அதற்கு பதிலாக கைதட்டி உற்சாகபடுத்துங்கள் என விராட் கோலி சைகையால் ரசிகர்களிடம் கூறினார்.
பிறகு ஸ்மித் விராட் கோலிக்கு கை கொடுத்து தோளில் தட்டி கொடுத்து தனது நன்றியை ஸ்மித் தெரிவித்தார்.
 
 

author avatar
murugan