அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை 

அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை 

அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும்   உலகக்கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோலி  சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த போட்டியில் 37 ரன்கள் அடித்தபோது விராட் சாதனை படைத்துள்ளார்.
சர்வதெச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை  படைத்துள்ளார் .விராட் 417 இன்னிங்ஸில் விளையாடி 20,000 ரன்களை கடந்துள்ளார்.இதில் 224 ஒருநாள் போட்டிகள்,131 டெஸ்ட் போட்டிகள் ,62 இருபது ஓவர் போட்டிகள் அடங்கும். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளையும் சேர்த்து 20,000 ரன்களை கடந்துள்ளார்.
இதற்கு  முன்னதாக சச்சின் மற்றும் லாரா 453 இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்தனர்.தற்போது அந்த சாதனையை விராட் முறியடித்துள்ளார்.இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
 

Join our channel google news Youtube