பிட்னஸ் பிரிக் கோலியின் புதுவிதமான வர்க்அவுட் வீடியோ.. ஆச்சிரியமாக பார்த்த ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்தார்.

By surya | Published: May 27, 2020 05:07 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்தார். அந்த விடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் இருக்கோ இல்லையோ, அவரின் உடற்பயிற்சிக்கு முடிவே இல்லை. இதனால் அவரை ரசிகர்கள் "பிட்னஸ் கிங்" என அழைத்துவருகின்றனர். நேற்று அவர் 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்து அசத்தினார். அதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My first shot at 180 landings. Top exercise ?

A post shared by Virat Kohli (@virat.kohli) on

அந்த விடியோவில் அவர், 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்தார். ஒருகாலை ஊன்றிக்கொண்டு மற்றொரு காலால் 180 டிகிரியில் குதித்துக்கொண்டே திரும்பி, மற்றொரு காலை ஊன்றினார். மிக கடினமான பயிற்சியை செய்ததை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸை குவித்து வருகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc