கங்குலி சாதனையை முறியடித்து ,தோனியை சமன் செய்த-விராட் கோலி..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. இதில் கெமர் ரோச் 4 , ஷானன் கேப்ரியல் 3 விக்கெட்டை பறித்தனர்.

பின்னர்  முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டுக்கு 222 ரன்கள் சேர்ந்தனர்.இதில் இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி ,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.75 ரன்கள் முன்னிலையிலுடன் இந்திய அணி  இரண்டாவது இன்னிங்ஸை  தொடங்கி 343 ரன்கள் இருக்கும் போது டிக்ளர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டர்.

வெஸ்ட் இண்டீஸ்  அணி  419 ரன்கள் இலக்குடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை   தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கோலி , கங்குலி சாதனையை முறியடித்துள்ளார். கங்குலி கேப்டனாக 11 முறை வெளிநாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தந்து உள்ளார்.ஆனால் கோலி 12 போட்டியில் வெற்றி பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றுத் தந்தார். ஆனால் கோலி 47 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்று தோனி உடன் சாதனையை பகிர்ந்து உள்ளார்.இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 30 -ம் தேதிதொடங்க  தொடங்க உள்ளது.

author avatar
murugan