சச்சின் ,ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த விராட் கோலி!

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதற்கு முன் விளையாடிய டி 20 போட்டியிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் விளாசியதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்ற பெரும் உதவியாக இருந்தது.கோலி ஒருநாள் போட்டியில் தனது 43 சதத்தை நிறைவு செய்தார்.

Image

இந்நிலையில் கேப்டன் கோலி கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் 20,000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். கோலி கடந்த பத்து ஆண்டுகளில் 20,018 ரன்கள் குவித்து உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 10 ஆண்டுகளில் 18,962 ரன்கள் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது.தற்போது அந்த  சாதனையை கோலி முறியடித்து உள்ளார்.இதை தொடர்ந்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும் , இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் 10 ஆண்டுகளில் 15,962 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது.

தற்போது கோலி இவர்கள் இரண்டு பேரின் சாதனையையும் தகர்ந்து உள்ளார்.மேலும் கோலி இந்த ஆண்டு மட்டும் 11 முறை 50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.இதன் மூலம் ரோஹித் சர்மா உடன் இந்த சாதனையை பகிர்ந்து உள்ளார்.

 

author avatar
murugan