விராட் கோலிக்கு "சிறந்த மனிதர் விருது” அறிவிப்பு..!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த

By murugan | Published: Nov 21, 2019 04:59 PM

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் விலங்குகள் மீது அதிகமான பாசமும் கோலி வைத்துள்ளார். சில நாள்களுக்கு முன்  ஒரு யானையை 8 பேர் துன்புறுத்தியதை பார்த்து எங்களுக்கு தொடர்பு கொண்டு விலங்குகளை துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என கூறினார்.பின்னர் போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் யானையை துன்புறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூரு சாலையில் அனாதையாகக் காயத்துடன் உள்ள நாய்களுக்கு வசிக்க இடம் அமைக்க உதவி செய்தார்.மேலும் தனது ரசிகர்களிடம் நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார். எனவே விலங்குகள் நலன் மேல் அதிக ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது.இதற்கு முன் நடிகர் மாதவன், நடிகைகள் அனுஷ்கா சர்மா, ஹேமமாலினி, சன்னி லியோன் ஆகியோருக்கும் பீட்டா விருது வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc