28 C
Chennai
Saturday, December 5, 2020

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என இணையத்தில் வைரலான வீடியோ! வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்!

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார் . இவர் மதுரை நகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவருக்கு சளி, இருமல், சோர்வு ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,  சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை பெற்ற பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் அவரையும், அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் 2 மணி நேரங்கள் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சரக்கு வாகனம் ஒன்றை தயார் செய்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் சோர்வாக அமர்ந்திருப்பது சரக்கு வாகனத்தில் ஏறிச் செல்வது போன்றவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இல்லை என கூறி அவரையும் அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் மக்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வீட்டிற்கு வந்த முஸ்தபா தன்னை குறித்து இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்து, மனவேதனை அடைந்து, நேற்று காலை சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்டு, மதுரை ரயில்வே துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

UPPCL Recruitment: ஜூனியர் இன்ஜினியர் தேவை., ரூ.44,900 வரை சம்பளம்., அறிய வாய்ப்பு.!

யுபிபிசிஎல் கலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு பணியமர்த்தும் பணி நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 28, 2020 ஆகும். உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், யுபிபிசிஎல் (UPPCL) காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர்...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை நடைபெறும் என அறிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற...

மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்

தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில், பொதுப் பெயரிட" மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்...

அமைதியான போராட்டங்களுக்கு துணை நிற்பேன் – எச்சரிப்புக்கு பிறகும் கனட பிரதமர் கருத்து!

விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு இந்தியா எச்சரிப்பு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டங்களுக்கு தன் எப்பொழுதுமே துணை நிற்பேன் என கருத்து...

Related news