அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டம்.! கார்கள்,பொதுச்சொத்துக்கள் தீ வைப்பு.!

அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டம்.! கார்கள்,பொதுச்சொத்துக்கள் தீ வைப்பு.!

அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது.

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் பகுதியில் தற்போது அவசர நிலை அதிகரிக்கப்பட்டு மேலும் அங்கு வன்முறை வெடித்து வருகிறது, இதனால் அங்கு கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க போராட்டங்கள் லண்டனுக்கும் பரவியது.

இந்த போராட்டத்தின்போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மற்றும் அவரின் மகன் பேரன் ஆகியோரின் பாதுகாப்பு கருதி, அவர்களை பிரத்யேக பாதாள காவலர்கள் அறையில் அவர்களை தங்க வைத்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube