அரசிற்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்தது வன்முறை ! 26 பேர் பலி !

அரசிற்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்தது வன்முறை ! 26 பேர் பலி !

ஈராக்கில் அரசிற்கு எதிராக மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்  நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் வேலையின்மை , அரசின் மந்த நிலைமை ,ஊழல் ,பொருளாதார செயல்பாடு  என பல கோரிக்கைளை கண்டித்து அரசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாக்தாத் மற்றும் பாஸ்கரா என பல இடங்களில் போராட்ட காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் பாக்தாத்தில் போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கும் தீ வைத்தனர்.மேலும் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்கள் எழுப்பியும் வன்முறையில் ஈடுபட்டனர்.மேலும்;சாலைகளில் டயர்களையும் எரித்தனர்.
இதன்காரணமாக போராட்ட காரர்களுக்கும் , காவல் துறையினருக்கும் மோதல் முற்றியது.அது பின்பு வன்முறையாக மாறியது.அப்போது நடத்த பட்ட துப்பாக்கி  சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஇருந்தவர்கள் 180 பேர் படுகாயம் அடைந்தார்கள்.மேலும் 800க்கும் மேற்பட்ட காயம் அடைந்தார்கள்.
 

Join our channel google news Youtube