50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை  மட்டும் விட்டு வைக்குமா? இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் இரண்டு கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நிமிர்த்தி , மண்ணில் நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி சுமார் 12 மணி நேரம் நடைபெற்றுள்ளது. இந்த மரத்தை உயிர்ப்பிக்க சுமார் 50 ஆயிரம் செலவு செய்துள்ளனர்.

Latest Posts

செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!