நாளை முதல் நிலவின் உறைபனியில் விக்ரம் லேண்டர்! வருத்தத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

By manikandan | Published: Sep 20, 2019 06:12 PM

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் நிலவை தேடும் பணியில் விக்ரம் லேண்டர் தீவிரமாக களம் இறங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் இந்தப் பணியில் இறங்கியது. ஆனாலும், விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை. நிலவில் கடந்த 14 நாட்கள் மட்டுமே சூரிய வெளிச்சம் பட்டு தொடர் பகலாக இருக்கும். அதன் மூலம் லெண்டரில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படையாமல் இருக்கும். சோலார் கருவியும் சூரிய வெப்பத்தை ஆற்றலாக மாற்றி லேண்டர் இயங்க வழிவகை .நாளை முதல் நிலவில் இரவாக, சூரிய ஒளி படாமல் -200 டிகிரிக்கும் குறைவாக உறைபனி நிலவும். அடுத்த 14 நாட்களுக்கு இந்த சூழல் தான் இருக்கும் இந்த சூழலில் லேண்டரில் உள்ள எலெக்ட்ரானிக் பாகங்கள் சேதமடைந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc