மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம்!

மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

விஜய் வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு, வரி ஏய்ப்பு செய்தது உட்பட பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், எஸ்.அகோரம், சினிமா விநியோகஸ்தர் சுந்தர் ஆறுமுகம், அன்புசெழியன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இதனையடுத்து மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.