விஜய்யின் ஆளப்போறான் பாடல் செய்த சாதனை.!

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல்  120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்‌.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்து வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல் . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல்  120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .இதனை ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலுக்கு விவேக் எழுத கைலாஷ் ,சத்தியபிரகாஷ் ,சத்தியா ஏ.வி,தீபக் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.