சீனாவிலும் களமிறங்க உள்ள விஜய்யின் "பிகில்"..!

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் "பிகில்"இப்படத்தில் நயன்தாரா

By murugan | Published: Oct 15, 2019 12:58 PM

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் "பிகில்"இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார். "பிகில்" திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் "பிகில்" திரைப்படத்தை சீனாவிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குமுன் சீனாவில்  "டங்கல்"  , "மாம்" ஆகிய  திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் "பிகில்" திரைப்படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்து உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc