இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம்

By manikandan | Published: Feb 28, 2018 01:17 PM

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் தான் என்றும் சிலாகித்து வந்தனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அவர் கதாநாயகனை தேடி அலைகிறாராம். தெலுங்கு நடிகர் இன்னும் ஒத்து வரவில்லையாம். தளபதியாரோ இன்னும் 2 வருடங்கள் போகட்டும் என சொல்லி தட்டி கழிக்கிறாராம். இதனால் அடுத்த படத்தை யாரை வைத்து எடுப்பது என தவித்து வருகிறாராம். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc