#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர்  இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இதனிடையே தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

Join our channel google news Youtube