மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

மிசோரம் மாநிலம், ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, சில தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகளுடனான ஊரடங்கை நவம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள “ஐசவ்ல்” மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகாரிக்க தொடங்கிய நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதற்காகவும், அவர்களை கண்காணித்து சோதனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விமான உள்ளிட்ட போக்குவரத்துக்கு சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube