மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீஸாகியுள்ள திரைப்படம் 96. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.

இப்படம், பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி  – த்ரிஷா இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளதாகவும், அப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் த்ரிஷா முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.