காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது! விஜய் சேதுபதி வருத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காஷ்மீர் விவகாரம் பற்றி நடிகர் விஜய் சேதுபஹியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ மக்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆதிகாரம் செலுத்த கூடாது. பெரியார் கூறியது போல அடுத்தவர் வீட்டு பிரச்சனையில் நாம் தலையிட கூடாது. அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்த கூடாது. காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிராரானது. வருத்தமளிக்கிறது.’ என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.