அடுத்தடுத்த இரண்டு தினங்களில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன், கடைசி

By manikandan | Published: Sep 20, 2019 04:49 PM

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன், கடைசி விவசாயி, துக்ளக், லாபம் என பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். இதில் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம். இப்படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு இரண்டு நாள் கழித்து அதாவது அக்டோபர் 4ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc