காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திகில் திரைப்படம்!

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திகில் திரைப்படம்

By Fahad | Published: Apr 02 2020 08:46 AM

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திகில் திரைப்படம் அவள் இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவும், சித்தார்த்தும் சேர்ந்து தயாரித்து இருந்தனர். தற்போது இயக்குனர் மிலிந்த் ராவ் புதிய படத்தை இயக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியதுவம் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி  வேடத்தில் நடிக்க உள்ளார்..இப்படத்தினை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஒரு பாலிவுட் நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

More News From tamil cinema news