சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை..!

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று அதிகாலையில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது, அதிகாலை 2.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 8 சென்டிமீட்டர், கொளப்பாக்கத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், குரோம்பேட்டை பம்மல், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 மணி நேரம் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது .சென்னையின் மற்ற பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.