வீடியோ:இலங்கை அணியிடம் தோல்வியடைந்ததால் பாக். கேப்டன் கட்- அவுட்டை உடைக்கும் ரசிகர்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில்

By murugan | Published: Oct 11, 2019 01:17 PM

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகமதுவின் கட்- அவுட்டை  கடும் கோபத்துடன் காலால் எட்டி உதைத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. இந்த தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில் இரண்டாம் நிலை வீரர்களை கொண்டு இலங்கை அணி விளையாடியது அவர்களுடன் கூட விளையாடி  வெற்றி பெற முடியாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு முன் உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.அப்போதும் பாகிஸ்தான் ரசிகர்கள் கேப்டன்சர்பராஸ் அகமது கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc