இடைத்தேர்தலில் வெற்றி,மக்களவை தேர்தலிலும் அபார வெற்றி! திமுகவின் வெற்றி கணக்கு

தமிழக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது.ஆனால் அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. திமுக – 19, காங்கிரஸ் – 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, விசிக – 2, மதிமுக – 1, இ.யூமு.லீக் – 1, ஐ.ஜே.கே – 1, கொ.ம.தே.க – 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் ,அதிமுக 9 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment