காமெடி படத்தை இயக்க உள்ள 'அசுரன்' வெற்றி,மாறன்!? சூரி படத்தின் புதிய அப்டேட்!

அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெற்றிமாறன், சூரியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இப்படம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்து குமார் எழுதிய  பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பை தழுவி எடுக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கதையை தன் முதல்படமான பொல்லாதவன் படத்திற்கு முன்னதாகவே எழுதி இயக்குனர்  பாலு மஹிந்திராவிடம் கூறி பாராட்டு பெற்றாராம். மேலும் இப்படம் வெற்றிமாறனின் வழக்கமான கதையம்சமான வன்முறை நிறைந்த படமாக இருக்காதாம். இப்படம் கிராமத்து காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.