வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கும் தமிழ் சினிமாவின் பெரிய தலைகள்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் எனும் தொடர் வெற்றிகளையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடைசியாக வெளியான அசுரன் அனைவரதுபாராட்டையும் பெற்று, தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை வெகுவாக புகழ்ந்துவிட்டார். மேலும் இபபட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவும் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், காமெடி நடிகர் சூரியை வைத்து படம் இயக்க உள்ளார் இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
வெற்றிமாறன், ரஜினிகாந்திடம் ஏற்கனவே ஒரு அரசியல் கதையை கூறியுள்ளார். அந்த படத்தை தனது கடைசி படமாக அதாவது, தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளாராம். அநேகமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள 168வது படத்தை அடுத்து 169 படமாக அப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் வடசென்னை பாகம் 2 இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. அதனை சூரி படம் முடிந்து ஆரம்பிக்கிறாரா அல்லது ரஜினி படம் முடிந்து ஆரம்பிக்க உள்ளாரா அல்லது அசுரன் ஹிந்தி ரீமேக்கா என பொறுத்திருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.