வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள 'லாக்கப்' படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை

By ragi | Published: Jun 30, 2020 09:00 AM

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' மற்றும் கீர்த்தி சுரேஷின் ' பெங்குயின்' ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் 'யாதுமாகி நின்றாய்' என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'டேனி' என்ற படமும்  Zee5 ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கும் 'லாக்கப்'என்ற படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாக்கப். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ளார். அரோல் கோரெல்லி இசையமைக்கும் இந்த படத்தை Zee5 தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc