ஸ்டெர்லைட் ஆலை மூடியவுடன் ஹைட்ரோகார்பன் ஆலையை திறக்கிறது வேதாந்தா நிறுவனம்….இதில் ஏதோ உள்குத்து இருப்பதாக பொதுமக்கள் கருத்து…. அரசியல் தலைவர் கண்டனம்……

ஸ்டெர்லைட் ஆலை மூடியவுடன் ஹைட்ரோகார்பன் ஆலையை திறக்கிறது வேதாந்தா நிறுவனம்….இதில் ஏதோ உள்குத்து இருப்பதாக பொதுமக்கள் கருத்து…. அரசியல் தலைவர் கண்டனம்……

தமிழகத்தில் தற்போது விளைநிலங்களில் ஏற்கனவே  கெயில் நிறுவனம் ஹைட்ரோ கார்பன்  எடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

அந்த ஆலை பல்வேறு மக்கள் போராட்டத்திற்க்கு பின் மூடு விழா கண்டது.அதற்கு மாற்றாக தற்போது அரசு இந்த அனுமதியை அளித்திருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த நிறுவனம் ஆய்வு நடத்துவதற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறு தோண்ட அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *