பிப்ரவரியில் வெளியாகும் தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி வருகிறது. ஹிந்தி ரிமேக்கில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழில் இப்படத்தை பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் முழுவதும் தயாராகி டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இ4 என்டர்டெய்ன்ட்.மெயின்ட் தயாரித்து உள்ளது. தற்போது இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment