பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளதாம்!?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக

By manikandan | Published: Nov 27, 2019 06:18 PM

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம். இந்த படம் முழுவதும் ரெடியாகினாலும் படம் தயாரிப்பு தரப்பிற்க்கு பிடிக்காத காரணத்தால், அந்த படத்தை அப்படியே ஓரம்கட்டிவிட்டனர். அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரில் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, படத்தை எடுத்தனர். அப்படம் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வர்மா படம் சீயான் விக்ரமுக்கு பிடித்திருந்ததாம். அதனால் வர்மா படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc