விஏஓ தேர்விலும் முறைகேடு ? ஆவணங்களை கேட்கும் சிபிசிஐடி

 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற விஏஓ தேர்வு ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் .

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் ஜெயக்குமார் குரூப் 4 மற்றும் குரூப்- 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவலர் சித்தாண்டியை கைது செய்த நிலையில் பின்னர் இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.ஆனாலும் சிபிசிஐடி போலீசார் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன்படி சித்தாண்டியின் நெருங்கிய கூட்டாளியான விஏஓ நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.அந்த விசாரணையில்  2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.எனவே  2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற விஏஓ தேர்வு ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் .